அரூர்: வெள்ள அபாய எச்சரிக்கை.. கோட்டாட்சியர் அறிவிப்பு
கிருஷ்ணகிரி அணையில் இருந்து 7000 கன அடி தண்ணீர் இன்னும் சற்று நேரத்தில் திறந்து விடப்படுவதாக தகவல் வரப் பெற்றுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளம் கரைபுரண்டோடும் சூழல் எழுந்துள்ளது. ஆகவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தொடர்புடைய கிராமங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் இத்தகவலைத் தெரிவித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருந்திட உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இன்று(அக்.24) காலை அரூர் வருவாய் கோட்டாட்சியர் இரா. வில்சன் இராஜசேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.