10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தமிழர்கள்... இதுவே முதல்முறை!

83பார்த்தது
10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய தமிழர்கள்... இதுவே முதல்முறை!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் இன்று(அக்.24) தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் ஆடிய நியூசி. அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இப்போட்டியில் தமிழக வீரர்கள் அஸ்வின் 3, வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இந்திய அணிக்காக ஒரு இன்னிங்ஸில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் தமிழக வீரர்கள் வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

தொடர்புடைய செய்தி