உலகம் முழுவதும் ஐம்பது வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் அண்மையில் வெளியிட்டது. இதில் ஊர்மிளா, கிரண் மஜும்தார் ஷா, ஷீலா படேல் ஆகிய 3 இந்திய பெண்கள் இடம்பெற்றுள்ளனர். குஜராத்தை சேர்ந்த ஊர்மிளா (80) சமையல் போட்டிகளில் விருதுகளை குவித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த கிரண் மஜும்தார் ஷா (71) சிறந்த தொழில் முனைவோராக உள்ளார். மும்பையை சேர்ந்த ஷீலா படேல் (72) தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.