மராட்டியத்தின் நான்டெட் மாவட்டத்தில் ஹத்காவன் நகரில் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். பல நாட்களாக இது தொடர்ந்து நடந்துள்ளது என கூறப்படுகிறது. இதனை அந்த பெண் அவருடைய குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் ஷேக் அராபத் (வயது 21) என்ற அந்த வாலிபரை தேடி அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது, வீடு அருகே நின்றிருந்த ஷேக்கை குதி கொலை செய்தனர். இதுகுறித்த வழக்கில் பெண்ணின் குடும்பத்தினர் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.