கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் நேற்று முன்தினம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் வழக்கம் போல் போக்குவரத்து சேவை தொடங்கியது. இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் பல்வேறு சாலைகள் காணப்படுகிறது.