கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சந்தைவெளிப்பேட்டை, கண்ணுத்தோப்பு பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடத்தில் சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாடு சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் அழைப்பு விடுத்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து போராடி வருகின்றனர், இடப்பங்கீடு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியத்துவத்தினை விளக்கி கூறினார்.