அனகோண்டா படம் மூலம் பிரபலமான நடிகையும், பாப் பாடகியுமான ஜெனிஃபர் லோபஸ் (55) தனது 5-வது கணவரை விவாகரத்து செய்துள்ளார். பேட்மேன் பட கதாநாயகன் பென் அப்லெக்கை ஜெனிஃபர் லோபஸ் 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், விவாகரத்துக் கோரி ஜெனிஃபர் லோபஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். அப்லெக் பென்னிற்கு ஜெனிஃபர் லோபஸ் 2-வது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.