ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய புகைப்படத்துறையில் முத்திரைப்பதித்து இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரானார் ஹோமை வியாரவல்லா. கணவர் மானக்ஷா மூலம்தான் புகைப்படத்துறை ஹோமைக்கு அறிமுகமாகியுள்ளது. 1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீசஸில் பணிபுரிந்த போது, மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் பிரபலமான புகைப்படங்களை எடுத்துள்ளார் .இவரது பணியைப் பாராட்டி இந்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி சிறப்பித்துள்ளது.