பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் கூட்டம் கடலூர் மாவட்டம் நெய்வேலி வணிக வளாகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக சமூக நீதிப் பேரவையின் மாநில செயலாளர் வழக்கறிஞர் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.