

குறிஞ்சிப்பாடி: அங்காளபரமேஸ்வரி கோவில் மயானக்கொள்ளை திருவிழா
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி சின்னக் கடைவீதியில் எழுந்தருளியுள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.