
வடலூர்: பாமக ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடலூர் நகர பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மே- 11 சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா குறித்து பேசப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.