கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கம்பளிமேடு என்கிற ஊரக பகுதியில் மக்களுடன் முதல்வர் குறை கேட்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக உயர்க்கல்வி அமைச்சர் செழியன், வேளாண் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர் செல்வம், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் MK. விஷ்ணுபிரசாத், மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கினர்.