

வீராணநல்லூர்: முருகன் கோயிலில் கொடியேற்றம்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீராணநல்லூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தில் முதல் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றததுடன் நேற்று கோலாகலகமாக தொடங்கியது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.