தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-2026 பொது விவாதத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ உரையாற்றினார். இதில் பேசுகையில் சிறப்பு உட்கூறு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள state council அமைப்பினை மேம்படுத்த வேண்டுமெனவும், பதிவு உயர்வில் இடஒதுக்கீடு அளித்திட article 16(4A) நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு 500கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.