புவனகிரி - Bhuvanagiri

கடலூர்: ஒரே நாளில் 578 மனுக்கள் குவிந்தது

கடலூர்: ஒரே நாளில் 578 மனுக்கள் குவிந்தது

கடலூா் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்ப அட்டை, உதவித் தொகைகள், பட்டா, ஆக்கிரமிப்பு, குழந்தைகள் கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பாக மொத்தம் 578 மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீா்வு காணும்படி துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினார்.

வீடியோஸ்


హైదరాబాద్