சேத்தியாத்தோப்பு: அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்

65பார்த்தது
சேத்தியாத்தோப்பு: அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வடலூர் மித்ரா மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நேற்று 23.02.2025 ஞாயிற்றுக்கிழமை கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாதோப்பு குறுக்குரோட்டில் உள்ள ஜே.கே. திருமண மண்டபத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி