புவனகிரி: பாமக செயற்குழு கூட்டம்

68பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக பாமக சட்டமன்ற குழு தலைவரும் பாமக கெளரவ தலைவருமான ஜி.கே.மணி மற்றும் வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி பங்கேற்றனர். 

கூட்டத்தில்  வருகின்ற 23-ம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் சோழமண்டல சமூக சமுதாய நல்லிணக்க மாநாட்டில் கடலூர் தெற்கு மாவட்ட பாமக சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி