புவனகிரி: அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் கொடியேற்றம்

74பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாத மயான சூறை உற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் அடுத்த பத்து தினங்களுக்கு பல்வேறு விழாக்கள் நடைபெற இருக்கிறது அதன் தொடக்க விழாவாக கணபதி ஹோமத்துடன் கொடி ஏற்றம் விழா தொடங்கியது. இதில் ஆலயத்தில் உள்ள தீர்த்தகிணற்றில் தீர்த்தம் எடுத்து கோவில் கொடி மரத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ பூஜையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நாளை ஆலயத்தில் மயான சூறை உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி