கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் அதிமுக எம். எல். ஏ. அருண்மொழிதேவன் இருக்கை மேசைகளை பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வேல்முருகனிடம் வழங்கினார். இதில் தமிழ் ஆசிரியர் முருகானந்தம் வரவேற்றார். மேலும் பல்வேறு ஆசிரியர்கள் கட்சியினர், அம்மா பேரவை உமா மகேஸ்வரன், நகர செயலாளர் செல்வகுமார் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.