
புவனகிரி: இளம்பெண் மாயம்..காவல் துறை விசாரணை
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை உச்சி மேட்டுத் தெருவைச் சேர்ந்த முருகவேல் விவசாயி இவர் மகள் பிரியதர்ஷினி வயது 23, பி.காம் பட்டதாரி. சமீபத்தில் முருகவேல் மற்றும் குடும்பத்தினர், பிரியதர்ஷினியை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றனர். நேற்று முன்தினம் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது பிரியதர்ஷினியை காணவில்லை. இதுகுறித்த புகாரில் புவனகிரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.