சேத்தியாத்தோப்பு: பாஜக சார்பில் மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம்

55பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாதோப்பு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் புதியதாக தற்பொழுது நியமனம் செய்யப்பட்டுள்ளார் அவரை அறிமுகம் செய்யும் இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாவட்ட தலைவரை கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி