புவனகிரி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

72பார்த்தது
புவனகிரி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளான 24.02.2025 கடலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு அளவில், அதிமுக கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் திட்டக்குடியில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மற்ற அனைத்து இடங்களிலும் ஜெயலலிதா திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மிகுந்த சிறப்புடன் கொண்டாட வேண்டும் எனவும், 25.02.2025 அன்று சேத்தியாதோப்பிலும், 26.02.2025 அன்று திட்டக்குடியிலும், மற்றும் 28.02.2025 விருத்தாசலத்தில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்களிலும் அதிமுகவினர், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி