
சென்னை: மின்சாரம் தொடர்பான சேவைகளுக்கு புதிய இணையதளம் அறிமுகம்..
தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்குவதற்கு https://www.tnpdcl.org/en/tnpdcl/ என்ற புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்துவது, சூரிய ஒளி மின்சாரத்துக்கு விண்ணப்பிப்பது, மின்வெட்டு தொடர்பான புகாரளிப்பது, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்பது, ஆதார் எண்ணை இணைப்பது போன்ற அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற முடியும்.