ஆயிரம் விளக்கு - Thousand lights

சென்னை: விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சேகர்பாபு கருத்து

சென்னை: விஜய், பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சேகர்பாபு கருத்து

எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம் என்று தவெக தலைவர் விஜய் - தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.  சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுகவில் பிளவு உருவாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, "மற்ற இயக்கங்களில் ஊடுருவுதல் எங்களுடைய பழக்கம் அல்ல. தமிழகத்தின் தற்போதைய முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது கூட குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர விரும்பாதவர். நேர்வழியில் செல்பவர். எனவே, அந்தந்த இயக்கங்களில் உருவாகும் பிரச்சினைகளை அவரவர் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்த கட்சி விவகாரங்களில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதுமே விரும்பமாட்டார்" என்றார்.  தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னர்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.

வீடியோஸ்


சென்னை
சென்னை: அதிமுக சின்ன விவகாரம் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Feb 12, 2025, 05:02 IST/துறைமுகம்
துறைமுகம்

சென்னை: அதிமுக சின்ன விவகாரம் - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 12, 2025, 05:02 IST
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது. இந்த தடையை நீக்கக்கோரி முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் எம்பி யுமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி தரப்பில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் வாதத்தை பதிவு செய்த பின்னரே விசாரணை நடத்த தடை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். தீர்ப்பு வழங்கும் வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என தெரிவித்து தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.