பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல் - மு. க. ஸ்டாலின்

53பார்த்தது
2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழகத்துக்கு தேவையான நிதி ஒதுக்காதது உள்ளிட்ட மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, கூட்டத்தில் பேசிய மு. க. ஸ்டாலின், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பாஜகவிடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி