தி. மலை தீபத்திருவிழா: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

65பார்த்தது
திருவண்ணாமலையில் இன்றும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வு அறிக்கையின் படி மக்கள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருவண்ணாமலையில் இன்றும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு நேற்று கூட நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆய்வு நடத்தப்பட்ட அந்த ஆய்வறிக்கையின் படி தான், வழக்கமாக அனுமதிக்கப்படுவது போல மக்களை அனுமதிக்கலாமா? அல்லது குறைவானவர்களுக்கு அனுமதி அளிக்கலாமா என்பது பற்றி முடிவு செய்வோம். டிசம்பர் 13ஆம் தேதி திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீப ஒளியை மக்கள் அனைவரும் பார்க்கும் படி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி