சென்னை மெரினா கடற்கரை சாலையில் டிச.20 முதல் 5 நாட்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை மதியம் 12.30 முதல் இரவு 8.30 மணி வரையும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலவசமாக வாகனங்கள் நிறுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய உணவுகள், கிராமிய உணவுகள், அசைவ உணவுகள், சிறுதானிய உணவுகள் என எல்லாமே கிடைக்கும். ஒரு புடி புடிச்சிட்டு வாங்க.