ஆயிரம் விளக்கு - Thousand lights

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற்றிடுக: சீமான்

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற்றிடுக: சீமான்

அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை மனித உரிமையை மறுத்து, மக்களாட்சி முறைமையைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் பொதுப்பட்டியலில் இருக்கும் நிலையில், மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல், தன்னிச்சையாகப் புதிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப் படுத்தியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிக்கூத்தாக்கும். அதிலும் இந்தியத் தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சங்கிதா எனவும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பாரதிய நாகரிக் சுரக் ஷா சங்கிதா எனவும், இந்திய ஆதாரச் சட்டத்தை பாரதிய சாக் ஷிய அதினியம் எனவும் பாஜக அரசு சம்ஸ்கிருத மொழியில் பெயர் மாற்றம் செய்துள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. புதிய சட்டங்கள் மூலம் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் அவர்களை அங்கீகரிக்கப்பட்ட கூலிப்படையாக்கியுள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டத்துக்கும், அடிப்படை மனித உரிமைக்கும் எதிரான புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய பாஜக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
கள்ளச்சாராய பலிக்கு ரூ. 10 லட்சம் எப்படி வழங்க முடியும்?
Jul 05, 2024, 16:07 IST/துறைமுகம்
துறைமுகம்

கள்ளச்சாராய பலிக்கு ரூ. 10 லட்சம் எப்படி வழங்க முடியும்?

Jul 05, 2024, 16:07 IST
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இந்தத் தொகை மிகவும் அதிகம் எனவும் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கள்ளச் சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் எனவும், இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.