வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 20
0 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல. 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில்
திமுக கைப்பற்றும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், 200 தொகுதிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை வீணாகும் என்று ஒரு சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்துக்கே வராதவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்களுடைய நிலைப்பாடு 200 அல்ல. 234 தொகுதிகளையும் வரும் சட்டமன்றத் தேர்தலில்
திமுக கைப்பற்றும்.
திமுகவுக்கு எப்போதெல்லாம் அவதூறுகள் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் 80 கி. மீ வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கக் கூடிய
திமுக தொண்டன் 100 கி. மீ வேகத்தில் பயணிப்பான். 2026-ல் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை மீண்டும் அரியணையில் ஏற்றும்வரை எங்களுடைய பயணம், வேகம் குறையாது என்று அவர் கூறினார்.