KYC ஆவணங்களை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே அப்டேட் செய்ய முடியும். முதலில் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு Account No, Mobile No ஆகியவற்றை OTP-யுடன் சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும். பின்னர் நீங்கள் எந்த ஆவணத்தை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த ஆவணத்தின் விவரங்களைப் பதிவிட்டு, ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணத்தை பதிவேற்றி சப்மிட் செய்ய வேண்டும். Service Request Number அனுப்பப்படும். அதைக் கொண்டு KYC அப்டேட் நிலையை அறிந்துகொள்ளலாம்.