தியாகராய நகர் - Thiyagarayanagar

முதல்வர் நாளை டெல்லி பயணம்: செப். 27ல் பிரதமருடன் சந்திப்பு

முதல்வர் நாளை டெல்லி பயணம்: செப். 27ல் பிரதமருடன் சந்திப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (செப்.26) மாலை டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். செப்டம்பர் 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்துக்கான நிதி நிலுவைகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கிறார். முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை மாலை 5. 10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். இரவு, டெல்லியில், தமிழக எம்பிக்கள் அவரை வரவேற்கின்றனர். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். அப்போது, பள்ளிக் கல்வி தொடர்பான நிதி, மெட்ரோ ரயில் பணிகளுக்கான நிதி, ஜிஎஸ்டி இழப்பீடு, பல்வேறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கான நிதி மற்றும் ஒப்புதல், மேகேதாட்டு, முல்லைப்பெரியாறு விவகாரங்கள் குறித்து மனு அளிப்பார் என கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு முடிந்து, வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

வீடியோஸ்


சென்னை