தியாகராய நகர் - Thiyagarayanagar

ரூ. 7, 616 கோடி முதலீடு; முதல்வர் அமெரிக்க பயணம் தோல்வி: ராமதாஸ்

ரூ. 7, 616 கோடி முதலீடு; முதல்வர் அமெரிக்க பயணம் தோல்வி: ராமதாஸ்

வீண் விளம்பரங்களை விடுத்து தமிழகத்துக்கு தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று(செப்.13) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார அமைப்பின் 54ம் மாநாட்டின் போது மராட்டிய முதல்வர் ஷிண்டே தலைமையிலான குழு மொத்தம் ரூ. 3. 53 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவற்றின் பெரும்பாலானவை அமெரிக்க முதலீடுகள் ஆகும். இந்த மாநிலங்களுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவில் தமிழகம் ஈர்த்த முதலீடுகளின் மதிப்பு மிகவும் குறைவு ஆகும். அந்த வகையில் தமிழக முதல்வரின் அமெரிக்கப் பயணம் தோல்வியடைந்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. அதற்கான சிறந்த வழி தமிழ்நாட்டில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சாதகமான சூழலை ஏற்படுத்துவதும் தான். இதை செய்தால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் தானாக குவியும். எனவே, வீண் விளம்பரங்களை விடுத்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோஸ்


சென்னை
சென்னையில் கார் ஆலை மீண்டும் திறக்கப்படும்: ஃபோர்டு நிறுவனம்
Sep 14, 2024, 08:09 IST/துறைமுகம்
துறைமுகம்

சென்னையில் கார் ஆலை மீண்டும் திறக்கப்படும்: ஃபோர்டு நிறுவனம்

Sep 14, 2024, 08:09 IST
சென்னை மறைமலைநகர் கார் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்று ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதல்வர் மு. க. ஸ்டாலின், ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். சென்னை மறைமலைநகரில் கார் உற்பத்தியை மீண்டும் துவக்க அவர் அழைப்பு விடுத்தார். ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவர் கே.ஹார்ட் லிங்கிடுஇன் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஃபோர்டு கார் நிறுவனத்தை மீண்டும் இயக்குவதற்கான எங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் கடிதத்தை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடனான சந்திப்பு உள்பட தமிழக அரசுடன் பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஃபோர்டு ஆலைக்கான அவர்களின் தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். புதிய உலகச் சந்தைகளுக்குச் சேவை செய்வதற்காக தமிழ்நாட்டின் உற்பத்தி நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். எங்கள் உலகளாவிய ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் குழுவில் ஏற்கனவே 12,000 க்கும் அதிகமானோர் உள்ளனர். அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 2,500 முதல் 3,000 பணியாளர்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.