நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

61பார்த்தது
நிர்மலா சீதாராமன் மன்னிப்பு கேட்க வேண்டும்: செல்வப்பெருந்தகை
மக்களை சந்திக்காமலேயே, வாக்குகளை பெறாமலேயே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு பெற்று மத்திய அமைச்சராக நீண்டகாலமாக நீடித்து வருகிற நிர்மலா சீதாராமனின் ஆணவப் போக்குக்கு தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை இன்று(செப்.13) கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கோவையில் ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொண்ட போது, பாரம்பரியமிக்க அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் முறையற்ற ஜிஎஸ்டி வரிவிதிப்பினால் ஏற்படுகிற பாதிப்புகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். அவர் பேசும் போது, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பலமுனைகளில் 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் என வரி விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று நிர்மலா சீதாராமன் கூறியபோது, ஒரு நிருபர் மணிப்பூர் கலவரம் குறித்து கேள்வி கேட்ட போது, “இத்தகைய குதர்க்கமான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, பாஜக மீது தமிழக மக்களுக்கு இருக்கிற வெறுப்பு நிர்மலா சீதாராமனின் அராஜக போக்கு காரணமாக பலமடங்கு கூடிவருவதையும், பாஜகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதையும் எவராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி