தியாகராய நகர் - Thiyagarayanagar

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: செல்வப்பெருந்தகை கருத்து

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு: செல்வப்பெருந்தகை கருத்து

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது அவரது கட்சியின் கருத்து. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை எந்த கொள்கை முடிவுகளாக இருந்தாலும் அதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்கும் என்று செல்வபெருந்தகை தெரிவித்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது அவரது கட்சியின் கருத்து. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை எந்த கொள்கை முடிவுகளாக இருந்தாலும் அதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தான் எடுக்கும் என்று தெரிவித்தார்.

வீடியோஸ்


சென்னை
பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்
Sep 16, 2024, 15:09 IST/சைதாபேட்டை
சைதாபேட்டை

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்

Sep 16, 2024, 15:09 IST
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரியில் உள்ள 2040 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று(செப்.16) முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B. Ed. ) 2024 - 2025ஆம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை www. tngasa. in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணமாக ரூ. 500 செலுத்தப்பட வேண்டும். SC மற்றும் ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்களை www. tngasa. in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம். மேலும் இது குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், 044 – 24343106 மற்றும் 044 -24342911 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.