லாட்டரி வழக்கு: மார்ட்டின் குடும்பத்தினர் மனு தள்ளுபடி

70பார்த்தது
லாட்டரி வழக்கு: மார்ட்டின் குடும்பத்தினர் மனு தள்ளுபடி
கொல்கத்தா, நாகாலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் லாட்டரி விற்பனை தொடர்பான வருமான வரி வழக்கை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றியதை எதிர்த்து லாட்டரி அதிபர் மார்ட்டின் குடும்பத்தினர் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மற்றும் அவரது மகள் டெய்ஸி ஆதவ் அர்ஜூனா மற்றும் அவர்களது கோவையைச் சேர்ந்த லாட்டரி விற்பனை நிறுவனமான சுவாலி ரியல் ப்ராப்பர்ட்டீஸ் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்களின் நிறுவனம் தங்களது லாட்டரி தொழிலை தமிழகத்தில் மேற்கொள்ளவில்லை. கொல்கத்தா வருமான வரித்துறையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் சூழலில், இந்த வருமான வரி வழக்கு விசாரணையை கோவையில் இருந்து கொல்கத்தாவுக்கு மாற்றியதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி