சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும் இணைந்து, இன்று(செப்.16) திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு இடங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி, ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், சென்ட்ரல் ரயில்வே போலீஸார், ஆர். பி. எஃப் போலீஸார் ஆகியோர் இணைந்து, போதைப்பொருள் தொடர்பாக இன்று(செப்.16) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
வெளிமாநிலங்களில் இருந்து சென்ட்ரலுக்கு வந்தடைந்த ரயில் மற்றும் ரயில் நிலையத்தின் நடைமேடை, காத்திருபோர் அறையில் அமர்ந்திருந்த பயணிகளின் உடமைகள், பார்சல்கள் ஆகியவற்றை மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை செய்தனர்.