குத்தம்பாக்கம்: நூலகத்தை திறந்து வைத்த அமைச்சர்
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குத்தம்பாக்கம் கிராமத்தில் திருவள்ளூர் மாவட்டம் நூலக ஆணை குழு கிளை நூலகம் ரூபாய் 65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் ஆட்சியர் பிரபு சங்கர் எம்எல்ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி நூலகத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர் நூலகத்தில் உள்ள புத்தகங்களை பார்வையிட்ட ஆய்வு செய்த அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி நூலகத்தில் இருந்த பதிவேட்டில் கையெழுத்து இட்டார். நூலக வளாகத்தில் முறையாக சிமெண்ட் தரை அமைக்காமல் சேரும் சகதியாய் இருந்த இடத்தை தற்காலிகமாக சீரமைத்து பச்சை நிற பிளாஸ்டிக் பொருட்களை மேட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தி இருந்தன பொதுப்பணித்துறையினர் ஒப்பந்த அடிப்படையில் 65 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நூலகத்தில் குடிதண்ணீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் குத்தம்பாக்கம் கிளை நூலகம் முழுமையாக ஒதுக்கப்பட்ட தொகை 65 லட்சத்தை செலவிடாமல் நூலகத்தின் பின்புறம் உள்ள பள்ளத்தை கூட நிரப்பாமல் அவசர கதியில் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது