திருவள்ளூர்: வனதுர்க்கையம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

65பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மடம் கிராமத்தில், வனதுர்க்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிறைவு நாளில், தீமிதி விழா நடந்து வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டிற்கான நவராத்திரி விழா கடந்த மாதம், 03ம் தேதி துவங்கியது.  

தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி மற்றும் திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.   அதனைத் தொடர்ந்து  300க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில், திருத்தணி நகர வாசிகள் திரளாக பங்கேற்று சாமி தரி்சனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி