வயதானவர்கள் மற்றும் பன்மொழி பேசுபவர்கள் முன் அனுபவம் இன்றி பாடியதால் குழப்பம் ஏற்பட்டதாக டிடி தரப்பு விளக்கமளித்துள்ளது. 'திராவிட நல் திருநாடு' என்ற வார்த்தையை விடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், வயதானவர்கள் மற்றும் பன்மொழி பேசுபவர்கள் முன் அனுபவம் இன்றி பாடியதால், பதற்றத்தில் திக்கியதாகவும், அதனால் குழப்பம் ஏற்பட்டதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.