பிரபல நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் தாய் காலமானார். இன்று அக்.18 மாலை போஸ் வெங்கட்டின் தாய் ராஜாமணி (83), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான அறந்தாங்கியில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே போஸ் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.