ஆவடி: மழை நீர் வெளியேற்றும் பணியினை அமைச்சர் ஆய்வு

72பார்த்தது
ஆவடி: மழை நீர் வெளியேற்றும் பணியினை அமைச்சர் ஆய்வு
நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று (15. 10. 2024) வடகிழக்கு பருவமழை-2024 ஆவடி, சேக்காடு தரைப்பாலத்தில் மழை நீரை வெளியேற்றும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. சா. மு. நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் இ. ஆ. ப. , அவர்கள், வேளாண்மைத்துறை இயக்குநர், மற்றும் திருவள்ளுர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு. பி. முருகேஷ், இ. ஆ. ப. , அவர்கள், ஆவடி மாநகராட்சி மேயர் திரு. கு. உதயகுமார் ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு. எஸ். கந்தசாமி இ. ஆ. ப. , ஆகியோர் உள்ளனர்