மணலி புது நகர் நாபாளையம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்த மழை நீரை மோட்டார் மூலம் இரண்டாவது நாளாக அகற்றி வருகின்றனர்
கனமழையில் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலத்தில் தங்களது கார்களை இருபுறமும் பாதுகாப்பாக பொதுமக்கள்
நிறுத்தி உள்ளனர்
திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் மணலி புதுநகர் நாப்பாளையம் உள்ளிட்ட கொசஸ்தலை ஆற்றினை ஒட்டிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த கன மழை காலங்களில் ஏற்பட்ட சேதத்தை போன்று தற்போதும் மழை நீர் சூழ்ந்து பாதிக்காத வகையில் தங்களுடைய கார் இருசக்கர வாகனங்களை அங்குள்ள மேம்பாலத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு புறங்களிலும் நிறுத்தி வைத்துள்ளனர் மேலும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில்
சூழ்ந்துள்ள மழை நீரை மோட்டார் மூலம் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால்
புழல் உபரி நீர் திறக்கப்பட்டால்தான்
வெள்ளி வாயல் சாவடி சடையங்குப்பம்
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழும் என்பதாலும் வெள்ளநீர் சூழ்ந்தால் வடிவதற்கு சில நாட்கள் ஆகும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது வாகனங்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து வருகின்றனர்.