வரலஷ்மி விரதம் கடைபிடித்த பெண் பக்தர்கள் வளையல் அணிவித்து அம்மனை வழிபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள புதுகும்முடிபூண்டி அருள்மிகு நாகாத்தம்மன் கோவிலில் ஆவணி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வரலஷ்மி
அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நாகாத்தம்மனுக்கு வண்ணமிகு வளையல்களை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்தனர் நாகாத்தம்மனின் அலங்காரத்தை சிறுபுழல் பேட்டை, வேர்க்காடு, ஏனாதி மேல்பாக்கம் பெத்திக்குப்பம் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.