வீடு புகுந்து 3 பேரை வெட்டி தப்பி ஓடிய கும்பல்

78பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், சின்னக்காவனம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் கள்ளக்காதல் விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி வெட்டி கொலை செய்தார்.

இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக உயிரிழந்த லட்சுமணனின் கூட்டாளிகள் ஐந்து பேர் கொண்ட கும்பல் லட்சுமனை கொலை செய்த மீஞ்சூர் தோட்டக்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணுவின் வீட்டிற்கு சென்று அதிகாலை நேரத்தில் விஷ்ணுவின் தந்தை ரகு, தாய் ஜெயபாரதி தம்பி விஷால் என்பவரது மனைவி அர்ச்சனா மூன்று பேரை தலை மற்றும் கைகளில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி உள்ளனர்.

படுகாயங்களுடன் மூன்று பேரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மீஞ்சூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மூன்று பேரை முன் விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

முன் விரோதம் காரணமாக கொலைக்கு பழி தீர்க்க கொலையாளியின் தந்தை தாய் மற்றும் தம்பி மனைவி உள்ளிட்ட மூவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்தி