புழல் காவாங்கரையில் பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீர் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் நாளை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் இன்றே
புழல் காவாங்கரை பகுதியில் தொடர்ந்து பெய்து கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகி வருகிறது தொடர்ந்து வாகனங்கள் அப்பகுதியில் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது மழைநீர் சாலைகளில் முழுவதுமாக தேங்கி வெளியேறப் போதிய வழி இல்லாததால் தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் அருகில் உள்ள பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் மழை நீர் முழுவதுமாக தேங்கி கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.