ஆவடி: போலி ஆவணங்கள் தயாரித்த இருவர் கைது

54பார்த்தது
கொளத்தூர் அடுத்த ராஜமங்களம் பாலாம்பிகை நகர் தாதங்குப்பம் பகுதியில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்வதாக ராஜமங்களம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்திக்கு ரகசிய தகவலில் தனிப்படை போலீசார் பத்திரிகை அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் அந்த சோதனையில் போலியாக அச்சடிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், நில ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து மோசடியில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். ஆவணங்கள் தயாரிக்க பயன்படும் பிரிண்டர், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து பிரபஞ்சம் என்ற பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் அவரது நண்பரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் கொளத்தூர் விநாயகபுரம் பத்மாவதி நகரை சேர்ந்த விஜய்ஆனந்த் என்பவர் பிரபஞ்சம் என்ற பத்திரிகையை நடத்தி வந்ததும் அவருடன் ஆவடியை சேர்ந்த ரூபன் ஆகிய இருவரும் பத்திரிகை அலுவலகம் என்ற பெயரில் போலியாக பள்ளி கல்லூரி சான்றிதழ்கள் மற்றும் நில ஆவணங்களை தயாரித்து அவற்றை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் இவர்கள் இருவரையும் ராஜமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மூர்த்தி கைது செய்து இவர்கள் இருவரின் மேல் வழக்கு பதிவு செய்து
இவர்களுடன் யார் யார் தொடர்பில் உள்ளனர்? ஏற்கனவே இவர்கள் மீது வழக்கு ஏதும் உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‌

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி