கண் வடிவில் நின்று கண் தானம் குறித்து விழிப்புணர்வு

74பார்த்தது
மஞ்சங்காரணையில் ஆயிரம் மாணவர்கள் கண்வடிவில் நின்று கண் தானம் குறித்து விழிப்புணர்வை மேற்கொண்டனர்

திருவள்ளூர் மாவட்டம்,
மஞ்சாங்கரனை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
அகர்வால் கண் வங்கி இணைந்து நடத்திய கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்டு கண் தானம் குறித்த விழிப்புணர்வு மேற்கொண்டனர் இதில் ஆயிரம் மாணவர்கள் நின்று கண் போன்ற உருவத்தை ஏற்படுத்தி கண் தானம் குறித்த உறுதிமொழி ஏற்றனர் இதில் வேல்ஸ் குழுமத்தின் துணைத் தலைவர் பிரித்தா கணேஷ், மருத்துவக் கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ் மற்றும் எம். எஸ். ஷீலாராணி, உதவி கண்காணிப்பாளர் சதிஷ்தேவ் உள்ளிட்ட வேல்ஸ் கல்லூரி மற்றும் மருத்துவமனை அலுவலர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி