திருவள்ளூர், போரூர், சைதாப்பேட்டை, வண்டலூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று(செப். , 25) இரவு பெய்த கனமழையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரம்பூர், பட்டாபிராம் சுரங்கப்பாதை மழை நீரில் மூழ்கியது. மழை நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
திருவள்ளூர் பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்தது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர்13. 4செ. மீ, ஆவடியில் 10செ. மீ. , நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் 7 செ. மீ. , வில்லிவாக்கத்தில் 8 செ. மீ. , எண்ணூரில் 5. 4 செ. மீ செங்கல்பட்டில் 6 செ. மீ. , மழைஅளவு பதிவாகியுளளது.