தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - ஆளுநர் மாளிகை நடவடிக்கை

50பார்த்தது
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் - ஆளுநர் மாளிகை நடவடிக்கை
தமிழ்த்தாய் வாழ்த்து தகறாக பாடப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை தவிர்த்து விட்டு பாடியதால் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதிகை நிறுவனத்துக்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி