பூந்தமல்லி அடுத்த கோவூர் பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் அரசு பேருந்து நிலைய பணிமனை திறப்பு மற்றும் புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கும் விழா கோவூரில் கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமையில் நடைபெற்றது, அமைச்சர் அன்பரசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேருந்து நிலைய பணிமனை மற்றும் புதிய பேருந்துகளை கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இந்தியாவே நமது முதல்வரை தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள் எந்த திட்டத்தை தொடங்கலாம் என பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
மகளிர் விடியல் பயணம் கொண்டு வந்தது போல்
இந்த திட்டத்திற்கும் விடியல் வந்துள்ளது, ரூ. 2800 கோடி போக்குவரத்து துறைக்கு முதல்வர் வழங்கியுள்ளார், 68% மகளிர் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.
போக்குவரத்து துறை சிரமத்தில் இருந்து சற்று மேலே வந்து செயல்பட தொடங்கியுள்ளது என பேசினார், மேலும் அமைச்சர் அன்பரசன் பேசுகையில் குன்றத்தூரில் இருந்து வரும் பேருந்துகள் பயணிகள் நிறைந்து வருவதால் கோவூரில் இருப்பவர்கள் நின்று கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது கோவூர்காரர்களும் பேருந்தில் அமர்ந்து செல்ல வேண்டும் என்பதற்காக இங்கு பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து இயக்கப்பட்டதாக பேசினார்.